தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வரும் நயன்தாரா தொடர்ந்து இளம் நடிகர்கள் முதல் முன்னணி நடிகர்கள் வரை அனைவருக்கும் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிசியாக உள்ளார். அப்படி தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் என நடித்துக் கொண்டிருக்கும் இவர் அதோடு மட்டுமல்லாமல் குடும்பம், குழந்தை, பிசினஸ் என அனைத்திலும் பிசியாக உள்ளார்.
நயன்தாரா தற்பொழுது சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பதனால் இவர் வெளியிடும் வீடியோக்கள், போட்டோக்கள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சோசியல் மீடியாவில் சில மாதங்களாகவே கவின் நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கப் போவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.
அதன்படி தற்பொழுது கவின் நயந்தாரா இருவரும் ரொமான்ஸ் லுக்கில் போட்டோ வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சடைய வைத்துள்ளது. இவர்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவன் இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் நயன்தாராவிற்கு 39 வயதாகும் நிலையில் கவினுக்கு 34 வயதில் ஆகிறது எனவே இவர்களுக்கு வயது வித்தியாசம் அதிகம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சின்னத்திரையின் மூலம் பிரபலமான கவின் மிக விரைவில் லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிப்பது அனைவரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.
தற்பொழுது இவர் நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பேக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் நயன்தாராவுடன் இவருடைய கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இவ்வாறு கவின் இந்தளவிற்கு சினிமாவில் உயர்வதற்கு காரணம் அவருடைய கடின உழைப்பு மட்டுமே என்று ரசிகர்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.