கவின் ரசிகர்களால் அசிங்கப்பட்ட விஜய் டிவி விக்னேஷ் கார்த்திக்!!

kavin
kavin

Bigg boss kavin:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்ளில் ஒருவர் கவின். இவர் ஆரம்பத்தில் சீரியல் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் படிக்கும் போதே ஆர் ஜே வாகா எப்எம் சேனல்களில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து அவர் படிப்படியாக குறும்படங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை மேம்படுத்திக் கொண்டார்.

இதனையடுத்து அவர் 2011ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒலிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் தனது சினிமா வாழ்க்கையை  ஆரம்பித்தார் என்பது நாம் அறிந்ததே. இதனை தொடர்ந்து அவர் அதே தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து மேலும் தனது ரசிகர்களை அதிகரித்துக் கொண்டது மட்டுமல்லாமல் தனது நடிப்புத் திறமையையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார். இதனை அடுத்து அவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு மேலும் அடைந்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.இந்நிலையில் கவின் ரசிகர்களால் பிரபல நடிகர் ஒருவர் பெரிதும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானதாக தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. அவர் வேறு யாருமல்ல பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடித்து வரும் விக்னேஷ் கார்த்தி தான். விஜய் டிவியில் காமெடி ஷோக்களைத் தொகுத்து வழங்குபவர் ஆவார்.

vignesh
vignesh

இவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவர் உங்கள் வாழ்க்கையில் தர்மசங்கடமாக ஆக்கிய நிகழ்வு ஏதாவது உள்ளதா என கேட்டதற்கு விக்னேஷ் கூறியது.இந்த மாதிரி பல இடங்களில் நடந்திருக்கிறது என அவர் கூறினார். மேலும் அவர் நானும் கவினும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் பலர் என்னைப் கவின் என்று நினைத்து போட்டோ எடுக்கணும், ஆட்டோகிராஃப் போடுங்கள் என கேட்பார்கள் அதனால் நான் பல இடங்களில் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி உள்ளேன் என கூறினார்.

இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் அண்ணன் தம்பியாக இருக்கலாம் எனவும் ரசிகர்கள் கூறி உள்ளனர்.இச்செய்தியை சமூகவலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

vignesh
vignesh