சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற பல சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி தனது திறமையை வெளிப்படுத்தி பிக்பாஸில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் நடிகர் கவின்.
பின்னர் பிக்பாஸில் லாஸ்லியாவை காதலித்து பெரிய அளவில் பிரபலமானார். இவருக்கு சமூக வலைதளங்களில் காவின்லியா என்ற ஆர்மீயை ரசிகர்கள் தொடங்கினர்.
அதனை தொடர்ந்து இவர் லிஃப்ட் என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வருகிறார். இவர் ஒரு நடிகராக உருமாறி கொஞ்ச நாட்களிலேயே இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
அதாவது அதே சீசனில் அவருடன் போட்டியாளராக மலேசியாவை சேர்ந்த பாடகர் முகேன் ராவ் என்பவர் கலந்து கொண்டிருந்தார். இவர்தான் அந்த சீசனில் வெற்றியாளராக திகழ்ந்தார். இவர் ஏற்கனவே வெற்றி என்கின்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து இவர் மேலும் தற்போது கவின் இயக்கத்தில் வேலன் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். எனவே இயக்குனராக அவதாரம் எடுத்தாக கவினுக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் முகேன் ராவ்க்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.