வேலைக்கு போற மாதிரி பிச்சை எடுக்க ரெடியாயிட்டு இருக்கானே.. புது அவதாரம் எடுத்த கவினின் ப்ளடி பெக்கர் ட்ரெய்லர்

நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. சிவபாலன் இயக்கத்தில் ரெடிங் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

ஏற்கனவே இதன் முன்னோட்ட வீடியோ வெளியாகி இருந்தபோது கவின் பிச்சைக்காரராக நடித்து ஏமாற்றுவார் என்பது காட்டப்பட்டது. அதை அடுத்து தற்போது ட்ரெய்லர் முழுவதும் அவர் செய்யும் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.

ஆபீஸ் போற மாதிரி பிச்சை எடுக்க அவர் மேக்கப் போடுவதில் தொடங்கி சிக்னலில் திடீரென சாவு ஊர்வலத்தை பார்த்து குத்தாட்டம் போடுவது வரை கலக்கி இருக்கிறார். அதேபோல் அரண்மனையில் தெரியாத்தனமாக மாட்டிக் கொண்டு அவர் படும் பாடும் சிரிப்பூட்டுகிறது.

இதிலிருந்தே படம் நிச்சயம் கலகலப்புக்கு கேரண்டி என தெரிகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் படங்களில் ப்ளடி பெக்கர் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருப்பினும் அமரன், பிரதர் ஆகிய படங்களும் வெளியாக இருப்பதால் இந்த ரேசில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பதை மீடியாக்கள் கவனித்து வருகிறது. ஆக மொத்தம் கவின் பிளடி பெக்கராக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டார்.