தமிழ் சினிமாவில் சமீப காலமாக தொலைக்காட்சிகளில் நடித்த நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைத்தால் அப்படியே படிப்படியாக நடிகையாக மாறி நடித்து வருகிறார்கள், அந்த வகையில் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பங்கேற்று பிரபலமடைந்தவர் நடிகை நீபா.
அப்படியே நீபா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட காவேரி என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார், அதனைத் தொடர்ந்து நீபா பல்வேறு நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார், அதேபோல் சீரியல்களிலும் படங்களிலும் நடித்துள்ளார் நீபா.
விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காவலன் இந்த திரைப்படத்திலும் நீபா வடிவேலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவரின் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் நீபா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மஸ்தானா மஸ்தானா மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என பல நிகழ்ச்சிகளில் டைட்டில் வின்னர் இவர்தான்.
நீபா காவலன் படத்தை தொடர்ந்து பெருசு, பள்ளிக்கூடம், தோட்டா, கண்ணும் கண்ணும், அம்முவாகிய நான் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார், 2013ம் ஆண்டு தொழிலதிபர் சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள நீபா சூப்பர் மாம் அண்ட் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இந்த நிலையில் நீபா நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் காவலன் படத்தில் நடித்த நீபாவா இது என ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்
https://www.instagram.com/reel/CFtSK2Qhcbi/?utm_source=ig_embed