80, 90 காலகட்டங்களில் நடித்த நடிகர்கள் பலரும் தற்பொழுதும் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர் ஆனால் ஒரு சிலர் திறமை இருந்தும் சினிமா பக்கம் தென்படாமல் இருக்கின்றனர் அந்த வகையில் 80 90 கால கட்டங்களில் கொடி கட்டி பறந்தவர் காமெடி நடிகர் கவுண்டமணி. இவர் ரஜினி கமல் சத்யராஜ் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். சினிமா உலகில் உடனே காமெடி கொடுக்க வேண்டும் என்றால் அது கவுண்டமணி ஆள் தான் முடியுமாம் அந்த அளவிற்கு திறமையாக இருந்தாராம்.
அதே சமயம் உடனடியாக யாரையாவது கலாய்க்க வேண்டும் என்றாலும் கவுண்டமணியை அடிச்சுக்க ஆளே இல்லை என சொல்லப்படுகிறது. சினிமா உலகில் இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் ஒரு ரேஞ்சுக்கு மேல் போனதற்கு பிறகு காமெடியனாக நடிக்க மாட்டேன் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என பிடிவாதத்தோடு இருந்தார் அதனாலேயே அவருக்கு சினிமா உலகில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது. இவர் ஹீரோவாக நடித்த படங்களும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த தலைமுறை நடிகர்கள் பலரும் கவுண்டமணி தனது படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக் கொண்டுதான் வருகின்றனர். ஆனால் கவுண்டமணி எதற்கும் தலையசைத்த பாடு இல்லை. அதற்கும் சில காரணங்கள் இருக்கிறது சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் மன்மதன் இந்த படத்தில் கவுண்டமணியை நடிக்க வைக்க சிம்பு அணுகி உள்ளார். ஆனால் கவுண்டமணி அப்பொழுது ஒரு கண்டிஷன் போட்டு உள்ளாr இரண்டு மூன்று சீன்கள் என்றால் வரமாட்டேன் படத்தில் நிறைய சீன்கள் இருந்தால் நான் நடிக்கிறேன் எனக்கு கூறினார்
அதற்கு சிம்புவும் ஓகே தெரிவித்துள்ளார் ஆனால் படப்பிடிப்பு தளத்தில் வந்த பொழுது இவரது காட்சிகள் பெரிதும் நீக்கப்பட்டு இருந்ததாம் இதனால் அப்பொழுதே கடுப்பாகிவிட்டாராம் இருந்தாலும் அந்த படத்தில் நடித்துவிட்டு போய்விட்டார் அதன் பிறகு தன்னிடம் யார் வந்து கதை சொன்னாலும் அவர்களுடன் கண்டிஷன் போட்டு விடுவாராம் நிறைய காட்சிகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று ஆனால் அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
மேலும் ஒரு சில படங்களை அவரே தவிர்த்து உள்ளாராம் இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் கவுண்டமணியுடன் நடித்து விட வேண்டும் என ஒரு பெரிய ஆசை வைத்துள்ளார் அதற்காக அவரது படத்தின் நடிக்க வைக்க வடக்குழி ஏற்பாடு செய்துள்ளது. அதே கண்டிஷன் தான் இப்பொழுதும் போட்டு உள்ளாராம் நிறைய காட்சிகள் இருந்தால் மட்டுமே நடிப்பேன் இல்லை என்றால் நடிக்க மாட்டேன் என சொல்லி உள்ளாராம். இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.