ஒரே நேரத்தில் அண்ணன் தம்பி என இருவருடனும் டபுள் கேம் ஆடிய கேடி ஐஸ்வர்யா..! போலீஸ்காரருக்கே இந்த நிலைமையா..?

aishwariya-2
aishwariya-2

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் ஒன்றுதான் பிரசாத் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் திரைப்படம்.  இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் அக்கா தங்கை என இரு வேடத்தில் நடித்து அண்ணன் தம்பியை காதலித்து இந்த காட்சியை நாம் திரைப்படத்தில் பார்த்திருப்போம்.

அந்த வகையில் தற்போது அதே பாணியில் சமூக வலைதள பக்கத்தில் அண்ணன் தம்பி என இருவரையும் அக்கா தங்கை என டபுள் கேம் ஆடி அவர்களிடம் இருந்து 34 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார் நமது கேடி ஐஸ்வர்யா.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மூலக்கரை என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் பாரதிராஜா.  இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.  இதனை தொடர்ந்து திருவொற்றியூர் கடலோர பாதுகாப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் பாரதிராஜாவின் முகநூல் பக்கத்தில் பாரதிதாசன் தெருவில் உள்ள ஐஸ்வர்யா என்ற 26 வயது இளம்பெண் நட்பை தொடர்ந்தார் அவர் நமது பாரதிராஜாவிடம் நான் டாக்டருக்கு படித்து வருவதாக கூறி அவரை காதலிப்பதாகவும் சில வார்த்தைகளை பேசியுள்ளார்.

மேலும் பாரதிராஜாவிடம் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசையை தூண்டிவிட்டது மட்டும் இல்லாமல் அவரிடமிருந்து பணம் நகை என அடிக்கடி பெற ஆரம்பித்தார்.  மேலும் அந்த படங்கள் அனைத்தையும் பாரதிராஜா ஐஸ்வர்யாவின் தந்தை பழனியில் வங்கியில் தான் அனுப்பி வைத்துள்ளார்.

இவ்வாறு ஆசை ஆசையாக பேசி இதுவரை 16 லட்சம் ரூபாவை பாரதி ராஜாவிடமிருந்து ஐஸ்வர்யா பெற்றுள்ளார்.  இவ்வாறு அவர் கூறியதும் மட்டும் இல்லாமல் ஐஸ்வர்யா தனக்கு ஒரு தங்கை இருப்பதாக பாரதிராஜாவை ஆழமாக நம்ப வைத்து விட்டார்.

அந்த வகையில் அவருடைய தங்கையை  நமது பாரதிராஜா தன்னுடைய பெரியப்பா மகன் மகேந்திரன் என்பவருடன் நட்பை ஏற்படுத்தி விட்டார்.  இவ்வாறு தங்கையாக நடித்து வந்த ஐஸ்வர்யா மகேந்திரனிடம் ஆசையாக பேசி காதலை வளர்த்து 20 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார்.

aishwariya-1
aishwariya-1

மேலும் ஐஸ்வர்யாவின் குரலைக் கேட்டு மயங்கிய நமது மகேந்திரன் அவருக்கு ஒரு சவரன் தங்க சங்கிலியும் ஒரு ஜோடி கொலுசையும் கொரியர் மூலமாக தன்னுடைய காதல் பரிசை அனுப்பி வைத்தார். இவ்வாறு ஏமாந்ததை உணர்ந்த பாரதிராஜா மற்றும் அவருடைய சகோதரர் மகேந்திரன் இருவருமே கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது இதன் அடிப்படையில் ஐஸ்வர்யா காவல்துறை அதிகாரி மூலமாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரு அவரை தீர விசாரித்த பொழுது அவர் டாக்டரும் கிடையாது அவருக்கு தங்கையும் கிடையாது என்பது தெரியவந்துள்ளது.