திரையுலகில் ஒரு சில சரித்திர திரைப்படங்களை நாம் நினைவில் இருந்து அகற்றவே முடியாது அந்த அளவிற்கு நம் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் சினிமா உலகில் இருக்கின்றன தமிழ் சினிமாவின் பழம்பெரும் படமான கட்டபொம்மன் திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம்.
அதில் சிவாஜியின் நடிப்பு உண்மையான கட்டபொம்மனுக்கு ஏற்றார்போல கம்பீரமாகவும், பேச்சிலும் பார்ப்பவர்களை கவர்ந்து இழுத்தது அந்த அளவிற்கு கட்டபொம்மன் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருப்பார். படம் வெளிவந்து அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
இந்த திரைப்படத்தை 1959ஆம் ஆண்டு பிஆர் பந்துலு என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.இந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மாபெரும் டாப் நடிகரான சிவாஜி எம்ஜிஆர் அவர்களில் யாரேனும் ஒருவர் தான் முதலில் தேர்ந்தெடுக்க நினைத்தார். அந்த வகையில் கட்டபொம்மன் படத்தை முதலில் தலைவர் எம்ஜிஆர் படம் அவரிடம் தான் இந்த கதையை கூறி உள்ளார் அவர் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அதன்பிறகு சிவாஜிக்கு கைமாறியது அதன்பின் இந்த படத்தில் கட்டபொம்மன் போலவே வாழ்ந்து காட்டினார். அந்த அளவிற்கு பிரமாண்டமான நடித்தார்.மேலும் இந்த திரைப்படம் இவருக்கு சினிமா வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக இன்றும் இருந்து வருகிறது மேலும் தற்போதைய தலைமுறை ரசிகர்களுக்கும் கட்டபொம்மன் படத்தை பார்த்து ரசிக்கின்றனர் அந்த அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த படத்தில் எம்ஜிஆர் நடித்திருந்தார் சிவாஜி அளவிற்கு நடித்திருப்பாரா என்பது கேள்விக்குறி தான் ஆனால் அவரது ஸ்டைலில் அவரது பாணியில் கட்டபொம்மன் ரோல்களில் நடித்து இருப்பார் என்று பலர் கூறுகின்றனர்.