தமிழ் சினிமாவில் தயாரிப்பாளரும் நடிகருமாக திகழ்ந்துவரும் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் திரைவிமர்சனத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
கபடி வீரன் கணவனாகவும் குஷ்பு வீராங்கனை மனைவியாகவும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின்னர் இவர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் தான் இந்த படத்தின் ஓன்லைன் கதை.
இந்த படத்தில் நாயகனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார் இவருக்கு தாய் தந்தை கிடையாது இவரை சிறு வயதிலிருந்து மாமா கருணாஸ் அவர்கள் தான் வளர்கிறார். ஜாலியாக ஊர் சுற்றுவது கபடி விளையாடுவது என இருக்கும் விஷ்ணு விஷாலுக்கு கருணாஸ் பெண் தேடுகிறார்.
ஆனால் இவர் போடும் கண்டிஷனுக்கு பெண்கள் ஏதும் கிடைக்கவில்லை. அதேபோல ஒரு பக்கம் கதாநாயகிக்கு சித்தப்பா முனிஸ் காந்த் மாப்பிளை தேடுகிறார் அவர் சொல்லும் கண்டிஷனுக்கும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை. அதன் பிறகு கருணாஸ் முனீஸ் காந்தம் ஏற்கனவே நண்பராக இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள்.
அப்போது கதாநாயகனை பற்றி கருணாஸ் கதாநாயகியை பற்றி முனீஸ் காந்தும் பேசுகிறார்கள் அப்போது அவர்கள் எடுக்கும் முடிவு கர்ணா அவர்களுக்கும் முனிஸ் காந்திற்கும் சாதகமாக அமைகிறது. பின்னர் விஷ்ணு விஷாலுக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது விஷ்ணுவுக்கு உண்மை தெரிந்ததா இல்லையா என்பதே மீதி உள்ள கதை.
கேரக்டர்கள் விமர்சனம்…
இந்த படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்தில் தனக்கு கிடைத்த சரியான வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.
பொதுவாக இடைவேளை காட்சியில் நாயகனுக்கு மாஸ் சீன் இருக்கும் ஆனால் இந்த படத்தில் நாயகிக்கு மாஸ் சீன் கொடுத்து நாயகனை டம்மி பீஸ் ஆக மாற்றி விட்டார்கள் அது ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக கணவன் மனைவியை கொச்சம் தட்டி பேசுவது மனைவி கணவரை கொச்சம் தட்டி பேசுவது இந்த காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
மேலும் ஆக்சன் ஒரு பக்கம் இருக்க காமெடி ஒரு பக்கம் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது இந்த படத்தில். இந்த படத்தில் அமைந்துள்ள பாடல் காட்சிகள் பெரிதளவும் ரசிகர்களை கவரவில்லை என்றாலும் ஓரளவு கேட்கும் அளவிற்கு உள்ளது. ஒளிப்பதிவாளர் சிறப்பாக தனது வேலையை செய்துள்ளார் அதிலும் குறிப்பாக கேரளாவில் உள்ள வீடுகளை இஞ்சி பை இஞ்சாக அழகாக காட்டியுள்ளார்.