பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தன்னுடைய திருமணத்திற்கு விருந்தினர்களை அழைக்கும் கத்ரீனா கைப்..! இதெல்லாம் ரொம்ப ஓவர்..!

kathrina kaif-1

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை கத்ரினா கைப். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது விக்கி கௌஷலின் என்பவரை திருமணம் செய்ய போகிறார். அந்தவகையில் இவர்களுடைய திருமணம் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில் இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மிக குறைந்தபட்ச விருந்தினர்கள் மட்டுமே அழைப்பு விடுத்துள்ளார்கள் அந்தவகையில் விழாவுக்கு வரும் விருந்தினர்களுக்கு ரகசிய குறியீடுகளும் வழங்கப்பட்டுள்ளதாம்.

ஏனெனில் இந்த விழாவில் தேவையற்ற சில விஷயங்களை தவிர்ப்பதற்காகவே இப்படிப்பட்ட ஏற்பாடுகளை கத்ரினா கைப் செய்துள்ளதாக அவர்களுடைய குடும்பத்தார் கூறி உள்ளார்கள். அந்த வகையில் திருமணத்தின் பொழுது புகைப்படங்கள் வீடியோக்கள் போன்றவற்றை உறவினர்கள் எடுக்க கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கேமரா மொபைல் போன் போன்றவை கூட இவர்களுடைய திருமணத்திற்கு எடுத்துவர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அந்தவகையில் டிசம்பர் 7ஆம் தேதி சங்கீத நிகழ்ச்சியும் எட்டாம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இறுதியாக ஒன்பதாம் தேதி தான் இவர்களுடைய திருமணம் என கூறப்படுகிறது மேலும் பாலிவுட் பிரபலங்கள் இவர்களுடைய திருமணத்திற்கு வருகை தருவதன் காரணமாக சுமார் 40 சொகுசு விடுதிகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இந்த முன்பதிவில் சல்மான்கான், ஷாருக்கான், ஆலியா பாட் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வதன் காரணமாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது மட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல இவர்களுடைய திருமணத்தில் பொழுதுபோக்கிற்காக முன்னணி பாடகர்களின் பாடல் நிகழ்ச்சியும் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

kathrina kaif-1
kathrina kaif-1