விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதுமே வித்தியாசமான ஷோக்களை நடத்துவது வழக்கம் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களுக்கு ரொம்ப பிடித்துப் போகவே அதனை சீசன் சீசனாக நடத்தி வருகிறது இதுவரை 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 6 – வது சீசனும் அண்மையில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.
டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் கப்பை தட்டி செல்ல போவது இரண்டு போட்டியாளர்கள் தான் மற்ற போட்டியாளர்களை ஒவ்வொருவராக வெளியேற்ற வேண்டும் எனவே வாரவாரம் எலிமினேஷன் ரவுண்டு வைக்கப்பட்டது அதில் ஒவ்வொருவராக குறைந்த ஓட்டுகளை வாங்கி வெளியேறினார்
கடைசியாக ஏ.டி.கே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்றும் ஒரு முக்கிய பிரபலம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார் அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல கதிரவன் தான். கதிரவன் மூன்று லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை கையில் எடுத்துவிட்டார் இதனால் அவர் வெளியேற வேண்டிய சூழல் நிலவி இருக்கிறது.
இதன் மூலம் கதிரவன் பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது 3 லட்சம் பணம் மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் அவர் இருந்து உள்ளதால் அதற்கான தொகையும் அவரிடம் வழங்கப்பட இருக்கிறதாம் அவருக்கு ஒரு நாளைக்கு 20,000 என பேசப்பட்டு 100 நாட்கள் இருந்ததால் 20 லட்சம்..
அது தவிர பணப்பெட்டி 3 லட்சம் மொத்தத்தில் அவர் 23 லட்சம் சம்பாதித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் எப்படியும் உங்களுக்கு வின்னரோ அல்லது ரன்னர் கப்போ கிடைக்கப் போவதில்லை நீங்கள் எடுத்த முடிவு சரியானது தான் எனக் கூறி அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.