விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காற்றுவாக்கில் இரண்டு காதல் மேலும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அதுமட்டுமில்லாமல் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பிய நிலையில் தற்பொழுது காத்துவாக்குல 2 காதல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
இது திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் காதலிப்பது போல் காட்டியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஜாலியாக கூறுவது தான் திரைப்படத்தின் கதை.
இதோ ட்ரைலர்.