நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருபவர். இவர் தமிழில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய் ஆகியோர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஒரு கால கட்டத்தில் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்த தமன்னாவுக்கு தற்பொழுது எந்த ஒரு பட வாய்ப்பும் அமையாமல் இருந்து வருகிறார்.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை பல நடிகைகள் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார்கள் அதேபோல் மற்ற நடிகைகள் பாடல் காட்சி, காதல் காட்சி, கிளாமர் என தங்களுக்கு ஏற்ற பாதையை தேர்ந்தெடுத்து நடித்து வருவார்கள். அந்த வரிசையில் காதல், கிளாமர், பாடல் என நடித்து வருபவர் நடிகை தமன்னா.
பொதுவாக சம்பளத்துக்கு ஏற்றார் போல தான் ஹீரோக்கள் நடிப்பார்கள் சம்பளம் அதிகமாக இருந்தால் தங்களுடைய உழைப்பை அதிகமாக போட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருப்பார்கள் அப்படி பல காட்சிகளில் ரிஸ்க் எடுத்து தான் நடிப்பார்கள் ஆனால் நடிகைகள் அப்படி கிடையாது எந்த ஒரு அலட்டமும் இல்லாமல் நடித்துவிட்டு கிளம்பி விடுவார்கள்.
அதிலும் சம்பளத்தை தாண்டி நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் செலவுதான் எக்கச்சக்கம். நடிகைகளுடன் எத்தனை பவுன்சர் எத்தனை உதவியாளர்கள் வருகிறார்கள் அவர்களுக்கும் சாப்பாடு சம்பளம் பாதுகாப்பு என அனைத்தையும் தயாரிப்பாளரின் தலையில் தான் கட்டுவார்கள். இதில் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் அந்த நடிகையை வேலை வாங்கி விடுவார்கள் நடிகை தமன்னா அப்படி ஒரு இயக்குனரிடம் தான் சிக்கினார்.
அவர் வேறு யாரும் கிடையாது தமிழ் சினிமாவில் படிக்காதவன் மாப்பிள்ளை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுராஜ் தான். இவர் இயக்கத்தில் விஷால், சூரி, தமன்னா ஆகியவர்கள் நடித்த கத்தி சண்டை திரைப்படம் ரசிகர்களிடம் பெரிதாக விமர்சனங்களை பெறவில்லை. ஆனால் இந்த திரைப்படத்திற்காக தமன்னாவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டதாம் அதேபோல் இந்த திரைப்படத்தில் தமன்னா ஓவர் கிளாமர் காட்டி நடித்திருப்பார் அதற்கு காரணம் இயக்குனர் சுராஜ் தான்.
கொடுக்கிற காசுக்கு சரியாக வேலையை வாங்கி விட்டு விட வேண்டும் என தமன்னாவை ரொம்பவும் வற்புறுத்தி கிளாமராக நடிக்க வைத்தாராம் தமன்னாவிற்கு இந்த அளவு கிளாமராக நடிப்பதற்கு விருப்பமே கிடையாதாம் ஆனாலும் வாங்கின சம்பளத்திற்காக நடிக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் நடித்துக் கொடுத்தாராம். இந்த தகவல் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.