கத்தி பட மீதி சம்பளத்தை கேட்டதால் மாஸ்டர் படத்தில் மண்ணை அள்ளி போட்ட நிறுவனம்.! குழம்பிப்போய் நின்ற பிரபலத்தின் மகன்.! காரணம் இதுதானா.!

vijay kaththi
vijay kaththi

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கத்தி இந்த திரைப்படத்தில் பிரபலத்தின் மகன் ஒருவர் நடித்திருந்தார் அந்தத் திரைப்படத்தில் நடித்ததற்கு பாதி சம்பளம் கொடுத்து விட்ட நிலையில் மீதி சம்பளத்தை கேட்டுள்ளார் அதனால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க விடாமல் பக்காவாக ஒரு குரூப்  நாசவேலை செய்துள்ளதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கத்தி. இந்த திரைப்படம் விஜய் திரைப்படத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது ஏனென்றால் வசூலில் 100 கோடி செய்த திரைப்படமாக அமைந்துவிட்டது. அதுமட்டுமில்லாமல் விஜய் சினிமா கேரியரில் திருப்பு முனையாக அமைந்த திரைப்படமும் இதுதான்.

இந்த திரைப்படத்தில் விவசாயிகள் தொடுத்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் கண்ணதாசனின் மகன் கோபி கண்ணதாசன். இவர் இதற்கு முன்பு விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும் தனக்கு கிடைக்கும் படத்தில் சிறு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து வருகிறார் கோபி கண்ணதாசன். இந்த நிலையில் கோபி கண்ணதாசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது  கத்தி திரைப்படத்தில் நடிப்பதற்காக குறிப்பிட்ட சம்பளம் பேசப்பட்டதாம் ஆனால் அப்பொழுது பாதி சம்பளத்தை மட்டும் கொடுத்துள்ளார்கள் மீதி சம்பளம் இதுவரை கொடுக்கவில்லையாம்.

அதனால் லைக்கா நிறுவனத்திடம் சென்று கோபி கண்ணதாசன் மீதி சம்பளத்தை கேட்டுள்ளார் அப்போது முழுவதும் கொடுத்துவிட்டதாக லைக்கா நிறுவனம் கூறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு சம்பளம் தருபவர்களை விசாரித்துக் கொள்ளுங்கள் என ஒரேடியாக கூறி வெளியே அனுப்பி விட்டார்களாம்.

gobi kannathasan
gobi kannathasan

அதன்பிறகு கோபி கண்ணதாசன் அவர்களுக்கு மாஸ்டர் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதே நேரத்தில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரிஷா திரைப்படத்தில் கமிட் ஆகி இருந்ததால் படப்பிடிப்பிற்காக  வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என கூறிவிட்டார்களாம் அதனால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

ஆனால் திரிஷா திரைப்படத்தின் படப்பிடிப்பை சிறிது காலம் தள்ளி வைத்து விட்டார்களாம் கண்ணதாசன் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி போய் இருந்தாராம் அதன் பிறகுதான் தெரிந்தது பாக்கி சம்பளத்தை கேட்டதால் மாஸ்டர் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் செய்துவிட்டார்களாம் அதுமட்டுமில்லாமல் வருகின்ற எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் செய்து வருகிறார்கள் என புரிந்து கொண்டாராம் கோபி கண்ணதாசன்.