கதிர் முல்லைகா இப்படி ஒரு நிலைமை.? ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த பாண்டியன் ஸ்டோர் எபிசொட்.!

pandiyan-store
pandiyan-store

விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அண்ணன் தம்பி 4 பேரும் மிகவும் சிரமப்பட்டு ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரை தொடங்கினார்கள்.

கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் மூத்த அண்ணன் மூர்த்தி அவருடைய மனைவி தனம், அடுத்த அண்ணன் கதிர் அவருடைய மனைவி முல்லை, மூன்றாவது அண்ணன் ஜீவா அவருடைய மனைவி மீனா கடைசியாக தம்பி அண்ணன் அவருடைய மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இதில் கதிரின் மனைவியாக விஜே சித்ரா நடித்து வந்தார் அதன் பிறகு அவரின் மறைவிற்குப் பிறகு வேறொரு நடிகை நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் புரோமோ வீடியோவை வெளியிட்டு பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே பரபரப்பாக வைத்து வருகிறார்கள், அந்த வகையில் தற்போது ஒரு புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்கலங்க வைத்துள்ளது.இந்த நிலையில் முல்லை இருக்கும் இடத்தை தேடி கதிர் அங்கும் இங்குமாக அலைகிறார்.

ஆனால் முல்லை குளத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார், இதைப்பார்த்த கதிர் அவரை கட்டியணைத்து ஏன் முல்லை உன்னை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா.? எனக் கூறி ஆறுதல் கூறுகிறார். அழுதுகொண்டே இருக்கும் முல்லை எல்லாரும் சேர்ந்து மரச்சிடிங்கள்ள எனக்கு குழந்தை பிறக்காதுன்னு சொல்றாங்க நான் எதுக்கு இனி உங்களுக்கு, என முல்லை கதிரைப் பார்த்து கேட்கிறார்.

அதற்கு கதிர் எனக்கு குழந்தையா முக்கியம் நீதான் முக்கியம் என ஆறுதலாக கூறுகிறார் என்னைப் பற்றி நீ கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா நான் இருக்கிறேன் என சமாதானப்படுத்தி முல்லையை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். வீட்டிற்கு வந்த முல்லை கண்கள் கலங்கியபடி வீட்டில் இருக்கும் அனைவரிடமும் எனக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் சொல்லிட்டாங்கம்மா என கூறியபடி அழுகிறார்.

இதனை பார்த்த குடும்பத்தார் அனைவரும் கதறி அழுகிறார்கள் ஆனால் கதிர் நான் மனைவியுடன் தான் இருப்பேன் என அவரை அணைத்துக் கொள்கிறார் தற்பொழுது வெளிவந்த புரோமோ வீடியோ ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்துள்ளது.