நல்லது செய்கிறேன் என்ற பெயரில் கதிர் – முல்லையை வீட்டை விட்டு அனுப்ப பார்க்கும் குடும்பம் – விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போகும் தொடர்.!

pandian store
pandian store

சின்னத்திரையில் மக்கள் பலரின் ஃபேவரட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் தொடர் டிஆர்பி யிலும் தொடர்ந்து டாப் லிஸ்டில் இருந்து வருகின்றன. இந்த சீரியலில் ஒரு கூட்டு குடும்பத்தில் நான்கு அண்ணன் தம்பிகள் சண்டை இல்லாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை திருமணம் செய்து கொண்டு வரும் நான்கு மருமகள்களுமே ஒரே வீட்டில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது சில பிரச்சினைகள் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் வருகிறது. இதில் கதிரின் மனைவி முல்லைக்கு இயற்கையாக குழந்தை பாக்கியம்.

இல்லாததால் அவருக்கு ட்ரீட்மென்ட் செய்ய லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. அதற்காக மூர்த்தி ஒருவரிடம் 5 லட்சம் பணம் வாங்கிய நிலையில் பணம் கொடுத்தவர் வீடு தேடி வந்து பணம் கேட்கும் போது பணம் இல்லாததால் வேறு வழியின்றி ஜீவா அவரது மனைவி மீனாவிடம் இருந்த பணத்தை வாங்கி கடனை அடைத்து உள்ளார்.

இந்த செய்தி தெரிந்த மீனாவின் அப்பா முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய பணத்தை என் மகள் கொடுக்க வேண்டுமா என ஒருபக்கம் கேட்க மறுபக்கம் தனம் தனது வலையளை கொழுந்தனார்களிடம்  கொடுத்து இதை விற்று வந்து மீனாவிடம் பணம் கொடுங்கள் என கூறுகையில் தனத்தின் அம்மா உன்னிடம் இருப்பது இந்த வளையல் மட்டும் தான்.

இதையும் அவர்களிடம் கொடுக்க போறியா என கேட்க கதிர் முல்லை இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் கதிர் முல்லையின் மருத்துவ செலவிற்காக கொடுத்த பணத்தை நான் எப்படியாவது திரும்பி கொடுத்து விடுகிறேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள் என்று வீட்டை விட்டு கிளம்புவது போன்று அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.