நாளை தேர்தல் நடக்கும் பொழுது இன்று பட்டுவாடா நடப்பதை பார்க்க முடியாமல் போய்விட்டது என வருத்தத்துடன் கஸ்தூரி ட்விட் போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் யாருக்கும் பயப்படாமல் மிகவும் தில்லாக பேசக் கூடிய நபர் எனவே கூறலாம். எத்தனை பேர் விமர்சனம் செய்தாலும் அதையெல்லாம் காதில் வாங்காமல் தான் உண்டு தன் லட்சியம் உண்டு என இருப்பவர்.
இந்த நிலையில் கஸ்தூரி இந்த தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் திராவிட கழகங்களையும் பெரியார் கழகங்களையும் எதிர்த்து பேசியதால் பாஜகவின் ஸ்லீப்பர் செல் என அழைக்கப்பட்டவர். பொதுவாக இவர் கமலுக்கு எதிராக பல விமர்சனங்களை செய்து வந்த கஸ்தூரி இந்த தேர்தலில் கமல் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் அவர் கூறுகையில் கமல் கட்சியில் நான் உறுப்பினராகக் கூட இல்லை. ஆனால் உங்கள் தொகுதியில் போட்டியிடும் செல்வகுமார் ஆதரித்துப் பேச விரும்புகிறேன் இதற்கு காரணம் அவர்கள் காலகட்டத்தில் மக்களுக்கு சேவை செய்தவர். இவர் உங்கள் தொகுதியை நன்றாக பார்த்துக் கொள்வார் என அவருக்கு கஸ்தூரி பிரச்சாரம் செய்தது அனைவரையும் பிரமிக்க வைத்தது.
மேலும் கஸ்தூரி தன்னுடைய சமூக வலைதளத்தில் என்னால் ஓட்டு போட முடியவில்லை என டுவிட் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தவிர்க்க முடியாத சிக்கல் அதனால் ஊரில் இல்லை ஓட்டு போட முடியவில்லையே என வருத்தத்தை விட காசு பட்டுவாடா செய்யும் பொழுது நான் காணாமல் போய் விட்டோமே என வருத்தத்தில் இருக்கிறேன் என்ன ட்விட் செய்துள்ளார்.
தவிர்க்க இயலாத சிக்கல்- ஊரில் இல்லை. வோட்டு போட முடியவில்லையே என்ற வருத்தத்தை விட காசு பட்டுவாடா நடக்கும் பொழுது காணாமல் போய்விட்டோமே என்ற வருத்தம் அதிகமா இருக்கு ! Feeling left out .😠🙃🤡
This year they have paid all income groups! #ShameonUs #dravidianLegacy
— Kasturi Shankar (@KasthuriShankar) April 4, 2021