தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ் இவர் ஆரம்பத்தில் நடிக்க விருப்பமில்லை என கூறியதாக ஒரு தகவல் சொல்லப்படுகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. தனுஷக்கு இரண்டு சகோதரிகள் ஒரு அண்ணன் இரண்டு ஆக்காவும் மருத்துவராக இருந்தனர்.
தனுஷசும் சிறப்பாக படித்தார் இவருக்கு மெரைன் இஞ்சினியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்படி காலங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர தனுஷின் அப்பா ஒரு பக்கம் படங்களை இயக்கி வந்தார் ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் தோல்வி படங்களாக மாறியதால் வேறு வழி இல்லாமல் ரசிகர்களை கவரம்படி துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தார்.
முதலில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் உதய் கிரண் தான் நடிக்க இருந்தார் குணசித்திர கதாபாத்திரத்தில் தனுஷ் நடிப்பதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் உதய் கிரண் இந்த படத்தில் நடிக்க முடியாது எனக் கூற இயக்குனர் கஸ்தூரிராஜா தனது மகன் தனுஷை ஹீரோவாக நடிக்க சொன்னாரு முதலில் தனுஷ் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார்.
கஸ்தூரிராஜா எனக்கு வேற ஆளே கிடைக்கலடா இந்த படத்தில் நீ நடி என கூறி இருக்கிறார் பிறகு அப்பாவின் பேச்சை மீற முடியாமல் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார். அதன்பிறகு இதுதான் எனக்கு முதலும் கடைசி படம் இனி நடிக்க மாட்டேன் என கூறியிருக்கிறார்.
ஆனால் தனுஷ் அண்ணன் செல்வராகவன் அடுத்ததாக காதல் கொண்டேன் படத்தை எடுத்தார் இந்த படத்தில் தனுஷை நடிக்க எப்படியோ சம்மதம் வாங்கி நடிக்க வைத்தார் அதன் பிறகு இவர் முழு ஹீரோவாகவே மாறிவிட்டார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.