தமிழ் சினிமாவில் தற்போது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் வெற்றிபெற்ற திரைப்படங்களை தமிழில் ரீமேக் செய்து எடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தமிழிலேயே அந்த காலத்தில் ஓடி வெற்றி பெற்ற சில பழைய திரைப்படங்களையும் கதையில் சிறு மாற்றம் செய்து தற்போது புதுப்பித்து எடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் பில்லா, தில்லு முல்லு போன்ற திரைப்படங்களும் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது.. அதனை தொடர்ந்து தற்போது சேட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் அவர்கள் காசேதான் கடவுளடா என்ற பழைய திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்று எடுத்து வருகிறார்.
இப்படத்தில் ஹீரோவாக மிர்ச்சி சிவா ஒப்பந்தமாகியுள்ளார், மிர்ச்சி சிவா முத்துராமன் கதாபாத்திரத்திலும், யோகிபாபு தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்களாம். மேலும் மனோரமா கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் இவர் இயக்கும் திரைப்படங்களை இவரே தயாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் தற்போது ஹிந்தியில் வெளியான த கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.