தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் வெளியாகி வெற்றி கண்ட திரைப்படமான பல்வேறு திரைப்படங்களும் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது அந்த வகையில் தற்போது 1972 இல் வெளிவந்த திரைப்படம்தான் காசேதான் கடவுளடா. இத்திரைப்படம் அப்போது மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை முத்துராமன் மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் வெண்ணிறாடை மூர்த்தி என பல்வேறு நடிகர்கள் நடித்த திரைப்படமாகும். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது ரசிகர்களை ஓயாமல் சிரிக்க வைத்தது.
அந்தவகையில் இந்த திரைப்படத்தின் ரீமேக்கில் குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி மனோபாலா ஊர்வசி கருணாகரன் யோகிபாபு போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை தலைவாசல் விஜய் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
கடந்த ஜூலை மாதம் தொடங்கி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 80 விழுக்காடு முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாகவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஆர் கண்ணன் அவர்கள் இசையமைக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் லீட் ரோலில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகிய இருவர்களும் நடிக்க உள்ளார்கள்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்த வெளியான திரைப்படம் தான் வணக்கம் சென்னை இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவரின் நடிப்பும் மிக குறிப்பிடதக்கது மட்டுமல்லாமல் வித்தியாசமாக இருந்தாலும் மூலமாக இந்த திரைப்படத்தின் வசூல் ஆனது நன்றாக கல்லா கட்டியது. ஆகையால் காசேதான் கடவுளடா திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் சிவா நடிப்பதன் காரணமாக எகிரி விட்டன.