நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் நுழைவது வழக்கம்தான் அந்தவகையில் இவரும் ஒருவர்.
தான்யா முதன்முதலில் 2016ஆம் ஆண்டு பல்லே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் நடித்த கருப்பன் திரைப்படம் தான் கை கொடுத்தது, இதில் இவரின் நடிப்பை பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு உருவானார்கள்.
அதேபோல் துப்பரிவாளன் திரைப்படத்தில் அணு இம்மானுவேல்க்கு பதிலாக இவர்தான் முதலில் நடிக்க இருந்தார், ஆனால் இன்னும் இவர் முன்னணி நடிகை அந்தஸ்தை பெற முடியவில்லை, இந்த நிலையில் இவர் தற்பொழுது மாயோன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் பட வாய்ப்புக்காக மாடர்ன் உடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.