சினிமாவுக்கு டாட்டா காட்டிவிட்டு வேறு பாதையை நோக்கி சென்ற கருணாஸ் பட நடிகை..! கடைசியில மாமியார் வீடு தான் மிச்சம் ..!

karunas
karunas

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து பிரபலமானவர் தான் நடிகர் கருணாஸ் இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான அம்பாசமுத்திரம் அம்பானி என்ற திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் நவநீத் கௌர். இவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் மிக விரைவாக பிரபலமடைந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் கருணாஸ் உடன் இணைந்து பல்வேறு சேவைகள் செய்ததன் மூலமாக ரசிகர் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருணாஸ் நடிக்கும் பல்வேறு திரைப்படங்களில் இவர் ஜோடியாக நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம்தான் மிஞ்சியது.  அந்த வகையில் நமது நடிகை தற்போது சினிமாவில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் மகாராஷ்டிராவில் சென்றுவிட்டாராம்.

நமது நடிகை தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்தது மட்டுமல்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கலந்துகொண்டு சுயேச்சையாக வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறு சிறு வயதிலேயே எம்எல்ஏவான நமது நடிகை மோச்சி என்ற சமூக சான்றிதழை பெற்று உள்ளார் ஆனால் அந்த சான்றிதழ் போலியான சான்றிதழ் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதனால் அவருடைய ஜாதி சான்றிதழை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அவருக்கு இரண்டு லட்சம் அபராதமும் ஆறு மாதத்திற்குள் அவர் சரணடைய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது..

இதற்கு நமது நடிகை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராக இருப்பதாகவும் இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய போவதாகவும் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்  இதன் மூலம் தனக்கு நீதி கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

navnit kavur
navnit kavur