நடிகர் சூர்யா படங்களில் நடிப்பதையும் தாண்டி தனது 2d நிறுவனத்தின் மூலம் பல்வேறு சிறந்த படங்களை தயாரித்து அசத்தி வருகிறது அந்த வகையில் தற்பொழுது முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இரு தினங்களுக்கு முன்பு திரையரங்கில் கோலாகலமாக வெளியானது.
விருமன் படத்தை பார்த்த மக்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல விமர்சனத்தை கொடுத்து கொண்டாடி வருகின்றனர் இதனால் படகுழு தற்பொழுது செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம். விருமன் படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் ஹீரோயின்னாக அறிமுகமாகியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், மனோஜ், சிங்கம் புலி, சூரி, மைனா நந்தினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து இருக்கின்றனர் படம் முழுக்க முழுக்க காமெடி ஆக்சன் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு கிராமத்து படமாக இருப்பதால் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ரொம்ப பிடித்து போன படமாக தற்போது இந்த படம் உருமாறி உள்ளது.
அதன் காரணமாக விருமன் திரைப்படம் நல்ல வசூலை அள்ளி வருகிறது. முதல் நாளில் மட்டுமே கார்த்தியின் விருமன் திரைப்படம் ஏழு எட்டு கோடி அள்ளியதாக தகவல் வெளிவந்தன. இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டாவது நாளும் எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்க்கையில் எட்டு முதல் ஒன்பது கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இரண்டு நாட்களையும் மொத்தமாக வைத்து பார்க்கையில் இந்த திரைப்படம் சுமார் 17 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என தகவல்கள் கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இந்த நாளும் வசூலில் அடித்து நொறுக்கும் என தெரிய வருகிறது.