இயக்குனர் முத்தையா தொடர்ந்து கிராமத்து கதை உள்ள படங்களை கொடுத்து அசத்தி வருகிறார். இதுவரை அவர் இயக்கத்தில் வெளியான கொம்பன், புலிகுத்தி பாண்டி, கொடிவீரன், மருது போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார் இவர் இயக்கத்தில் இப்போ வெளியான விருமன் திரைப்படம்.
கூட வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறது. விருமன் திரைப்படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்துள்ளார் ஹீரோயின்னாக அதிதி சங்கர் நடித்துள்ளார் இவர் பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் சரண்யா பொன்வண்ணன்.
மற்றும் மைனா நந்தினி, பிரகாஷ் ராஜ், சிங்கம் புலி, மனோஜ் மற்றும் பலர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தனர். இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் ஹவுஸ் புள்ளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. சுல்தான் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக்கு இது ஒரு நல்லதொரு வெற்றி படமாக அமைந்துள்ளதால் தற்பொழுது நடிகர் கார்த்தியும் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார்.
முதல் நாளே கோடிக்கணக்கில் வசூல் அள்ளிய விருமன் திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் பன்னிரண்டாம் தேதி வெளியான இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே 50 கோடி வசூலித்து உள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களிலும் நிச்சயம் கார்த்தியின் விருமன் திரைப்படம் நல்லதொரு வசூலை அள்ளி அசத்தும் என கூறப்படுகிறது.
இந்த படத்தை எதிர்த்து தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் திரையரங்கில் பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று நல்ல வசூல் பேட்டை நடத்தி வருகிறது தற்போது இந்த இரண்டு படங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றனர் இருப்பினும் வசூல் விருமன் திரைப்படம் நன்றாகவே அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.