OTT தளத்தில் ரிலீஸ் ஆகும் கார்த்தியின் “சர்தார் திரைப்படம்” – எப்பொழுது தெரியுமா.?

sardar
sardar

நடிகர் கார்த்தி அண்மைக்காலமாக தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த படங்களும் தொடர்ந்து வெற்றிவாகை சூடுகின்றன ஏன் இந்த வருடத்தில் கூட இவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற படங்கள்.

வெற்றி பெற்ற நிலையில் கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் வெளிவந்தது.  இந்த படத்தில் அவர் கதைக்கு ஏற்றபடி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை பிஎஸ் மித்திரன் தனது ஸ்டைலில் எடுத்திருந்தார். இந்த படம் இந்த காலகட்டத்திற்கு தேவையான படம்.

இந்த படத்தில் தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒரு சமூக பிரச்சனையை எடுத்து சொல்லி இருந்தது படம் அனைவருக்கும் ரொம்ப பிடித்திருந்ததால் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை திரையரங்கு சென்று கண்டுகளித்தனர்.  படம் தொடர்ந்து சிறப்பாக ஓடியதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அதன் காரணமாக இந்த படம் ஒட்டுமொத்தமாக 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.

நடிகர் கார்த்திக்கு செம்ம சந்தோஷம் ஏனென்றால் இந்த வருடத்தில் அவர் நடித்த மூன்று படங்களும் வெற்றிப்படங்கள் என்பதால் ஹாட்ரிக் வெற்றியை அவர் ருசித்து இருக்கிறார். இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் OTT தளத்திலும் வெளியாக இருக்கிறது அது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது விலாவாரியாக பார்ப்போம்..

கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் ஆஹா OTT தளத்தில் நவம்பர் 18ஆம் தேதி கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது கார்த்தி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது இனி எப்பொழுது வேண்டுமானாலும் சர்தார் திரைப்படத்தை ஆஹா OTT தளத்தில் பார்க்கலாம்..