வசூல் மழையில் கார்த்தியின் சர்தார் ..! 100 கோடியை தாண்டிய கலெக்ஷன்..

sardar-
sardar-

சூர்யாவின் தம்பி கார்த்தி முதலில் மணிரத்தினதிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார் முதல் படத்திலே சிறப்பாக தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்து நடித்த திரைப்படங்கள்..

ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் இருந்ததால் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போகின. அந்த வகையில் நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று, பையா, காஷ்மோரா என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் நடித்திருக்கிறார். ஏன் இந்த வருடத்தில் கூட இவர் நடித்த விருமன், பொன்னியின் செல்வன் போன்ற..

படங்கள் கூட வெளிவந்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. மேலும் அந்த படங்கள் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றனர் கடந்த தீபாவளியை முன்னிட்டு கூட பி எஸ் மித்திரனுடன் கைகோர்த்து கார்த்தி நடித்த சர்தார் திரைப்படம் வெளிவந்தது. படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர் இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்தார்.

அவருடன் கைகோர்த்து முனீஸ் காந்த், ராசி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து இருந்தனர். படம் தொடர்ந்து சூப்பராக ஒடியதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நன்றாகவே அள்ளியது. இப்படி இருக்கின்ற நிலையில் சர்தார் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்து உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளிவந்துள்ளன மேலும் சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்தையும் எடுக்கப்பட படகுழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் தற்போது கார்த்தி ரசிகர்களை சந்தோஷப்பட வைத்துள்ளது.