தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகியோர்கள் நடித்து வந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளார்களா என்றால் அது கேள்விக்குறிதான் ஏனென்றால் ஆரம்பத்தில் படங்கள் கிடைத்தாலும் போகப் போக தனது நடிப்பை வெளிப்படுத்தி அச்சத்தினால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்பும் மக்கள் மத்தியில் நல்ல பெயரும் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது.
அதை சிறப்பாக செய்து வருபவர்தான் நடிகர் கார்த்தி ஆரம்பத்தில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் அப்போதே குடியேறினார் அதன் பிறகு வித்தியாசமான படங்களைக் கொடுத்து நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து உள்ளார்.
தற்போது கிராமத்து கதை உள்ள ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு “விருமன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை முத்தையா இயக்கி வருகிறார் இதற்கு முன்பாக கார்த்தியும் முத்தையாவும் ஏற்கனவே இணைந்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து “கொம்பன்” என்ற மாபெரும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து உள்ளனர். இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் தற்போது உச்சத்தில் இருக்கிறது.
முத்தையா ,கார்த்தி இணைந்து பணியாற்றி வரும் “விருமன்” படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.