பருத்திவீரன் படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீரென உயிரிழந்திருக்கும் நிலையில் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த படத்தில் பிரியாமணி, சரவணன், சுஜா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய படத்தில் நடித்திருந்தனர்.
இவ்வாறு கார்த்தி நடிப்பில் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது. கிராமத்து பின்னணியில் உருவான இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அந்த வகையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர்தான் நடிகர் செவ்வாழை ராஜு.
இவர் சில திரைப்படங்களில் குணசேத்திர கதாபாத்திரத்திலும், காமெடி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் இவருடைய குரலால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவ்வாறு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த இவர் வயதான காரணத்தினால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தினார்.
அந்த வகையில் தற்பொழுது இவருக்கு 70 வயதான நிலையில் செவ்வாழை ராஜு உடல்நிலை குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் செவ்வாழை ராஜூ. இவ்வாறு இவருடைய மறைவு சினிமா வட்டாரங்களில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு சில திரைப்படங்களில் செவ்வாழை தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார் அப்படி பருத்திவீரன் திரைப்படம் இவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.