சினிமா உலகில் பல்வேறு விதமான வித்தியாசமான கதைகள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெறுகின்றன அந்த வகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
கார்த்தியை வைத்து கைதி, விஜய்யை வைத்து மாஸ்டர் இப்போ கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யின் 67 வது திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி வருகின்றன.
தளபதி விஜய் இப்போ பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி உடன் கைகோர்த்து தனது 66ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் உடன் தனது 67வது திரைப்படத்தில் கைகோர்க்க இருக்கிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி கிடையாது பாடலும் கிடையாது சண்டைக்காட்சிகள் இருக்க வாய்ப்புகள் இல்லை போல் தெரியவந்துள்ளது இந்த கதையை விஜய்க்கு ஏற்கனவே கூறி உள்ளார் அதற்கு விஜய்யும் சரி என ஏற்றுக் கொண்டுள்ளார் விஜய்க்கு ஒரு படத்தில் மிகப்பெரிய வெற்றி பெற காரணம் அவரது பாடல் மற்றும் நடனம் தான் அதுவே இதில் இல்லை.
என்பது விஜய் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லோகேஷ் கனகராஜ் பாடல் நடிகை நடனம் எதுவும் இல்லாமலேயே கைதி என்னும் ஒரு ஆக்சன் படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார் அந்த லிஸ்டில் விஜயின் 67வது திரைப்படத்தையும் வேற மாதிரி விஜய்க்கு எடுத்துக் கொடுப்பார் என தெரியவந்துள்ளது இருப்பினும் பாடல் இல்லாதது சற்று வருத்தத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.