கார்த்திக் சுப்புராஜை தனது வலைக்குள் இழுத்து போடும் – பிரமாண்ட இயக்குனர்.! விரிச்ச வலையில் சிக்குவாரா தனுஷ் பட இயக்குனர்.

karthik suburaj
karthik suburaj

கார்த்திக் சுப்பராஜ் சமீபகாலமாக டாப் நட்சத்திரமாக இருக்கும் ரஜினி தனுஷ் அவர்களுக்கு கதைசொல்லி சிறப்பான படங்களை கொடுத்த நிலையில் அடுத்ததாக சியான் 60 திரைப்படத்தையும் இயக்குகிறார் இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் மற்றும் அவர் மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் யாருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்திக் இருக்கும் இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர் தற்பொழுது தெலுங்கு, ஹிந்தி பக்கம் திசை திருப்பியுள்ளார் அந்த வகையில் தெலுங்கு நடிகர்  ராம் சரணுக்கு ஒரு புதிய கதை ஒன்றை சொல்லி ஓகே செய்துள்ளார்.

இந்த நிலையில் யக்குனர் ஷங்கர் அந்த படத்திற்காக புதிதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தனது கூட்டணியில் சேர்த்துள்ளார். ராம்சரண், ஷங்கர் இணையும் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத உள்ளாராம்.

இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப் பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது விரைவில் இவர் இணையும் செய்தியை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.