சீயான் 60 குறித்து முதன் முறையாக வாய் திறந்த கார்த்திக் சுப்புராஜ்.! வெளியான செம்ம அப்டேட்.

chiyan 60
chiyan 60

சினிமாவில் நீண்ட காலமாக நடித்து வரும் விக்ரம் தற்போது கோப்ரா மற்றும் அவரது  60 வது திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்திருக்கிறார். காரணம் சமிப காலமாக விக்ரம் படங்கள் வெற்றி பெற்றதால் இந்த இரண்டு திரைப்படங்களையும் பெரிதாக நம்பி இருக்கிறார்.

அனுபவம் வாய்ந்த இயக்குனர்களை நம்பி இறங்கி உள்ளார் விக்ரம். அதிலும் குறிப்பாக சீயான் 60 வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காரணம் விக்ரமுடன் இணைந்து அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன், கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். படத்தை வேற லெவெலில் எடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

படத்தின் ஷூட்டிங் பார்ட்டில் இருந்து  அவ்வப்பொழுது புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் இந்த படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கொடுத்துள்ளார் அவர் கூறியது.

விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப் படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 50% காட்சிகளில் முடிவடைந்துவிட்டன மீதி படம் தமிழ்நாட்டில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டவுடன் மீதி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

சீயான்60 திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது.