அட நம்ம கார்த்திக் சுப்புராஜ் மனைவி இந்த திரைப்படத்தில் நடித்துள்ளாரா வைரலாகும் புகைப்படம்.

karthik supuraj
karthik supuraj

karthik subburaj wife : தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் கார்த்திக்சுப்புராஜ் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் நுழைந்த சில காலத்திலேயே முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கி விட்டார், கார்த்திக் சுப்புராஜ் மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் தனது பள்ளி படிப்பை மதுரையிலும் கல்லூரிப் படிப்பை திருப்பரங்குன்றத்தில் முடித்தார்.

கார்த்திக் சுப்புராஜ் முதலில் குறும்படங்களை இயக்கிய தான் பிரபலம் அடைந்தார் இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இயக்குனர் போட்டியான நாளைய இயக்குனர் தொடரில் காட்சிப்பிழை, ராவணம், துரு, வி, நீர் என பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதன் பின்பு 2012 ஆம் ஆண்டு குறைவான பட்ஜெட்டில் விஜய்சேதுபதி நடித்து வெளியான பீசா திரைப்படத்தை இயக்கிய திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

இந்த திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதையும் பெற்றார், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததால் இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த்தை வைத்து ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தை இயக்கினார், அதன் பின்பு 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தை இயக்கினார்.

பெட்ட திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் சிம்ரன், திரிஷா, சசிகுமார், மேகா ஆகாஷ் என பலரும் நடித்திருந்தார்கள், இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் குடும்ப புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆனது.

karthik-subburaj-wife
karthik-subburaj-wife

மேலும் கார்த்திக் சுப்புராஜ் மனைவி பேட்ட திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் பேட்டை படத்தில் ஹாஸ்டல் வார்டனாக ரஜினி சேரும்பொழுது அவரிடம் ஒரு பெண் அப்பாயின்மென்ட் கொடுப்பார் அதுதான் கார்த்திக் சுப்புராஜ் மனைவி. பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் அடுத்ததாக தனுஷ் அவர்களை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது, இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து மலையாள பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கலையரசன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ளார்கள்.

கார்த்திக் சுப்புராஜ் மனைவி இப்படத்திற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார், இவர் பேட்ட திரைப்படத்தில் நடித்ததை கண்டுபிடித்த ரசிகர்கள் தற்போது இதற்கு முன் நடித்த படத்தையும் கண்டுபிடித்து புகைப்படத்தை வெளியிட்டு விட்டார்கள், இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் மனைவி சத்தியபாமா கணவரின் இயக்கத்தில் நடித்த காட்சிகளை கண்டுபிடித்து வைரலாகி வருகிறார்கள் ஆம் இரவி படத்தில் கமலினி முகர்ஜிக்கு தோழியாக நடித்துள்ளார் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

karthik-subburaj-wife
karthik-subburaj-wife