சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் தனது நாற்பதாவது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில், மோஷன் போஸ்டர் ஆகியவை இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. பல வெற்றி படங்களை கொடுத்து இருந்த நிலையில் தனுஷ் அவர்கள் தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் உடன் கைகோர்த்துள்ளதால் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்க்கு முன் வெற்றி மாறன் இயக்கிய அசுரன் திரைப்படமும் மற்றும் பட்டாஸ் திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.இந்த நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டுள்ளார்கள் படக்குழு. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படத்திற்கு ‘ஜகமே தந்திரம்’ என வைத்துள்ளார்கள், இதோ மோஷன் போஸ்டர்.
Here we go…!! #D40FirstLook !! #D40MotionPoster https://t.co/7F411gUKMO#D40isNowJT #JT@dhanushkraja @sash041075@Music_Santhosh @chakdyn @kshreyaas @vivekharshan @tuneyjohn
— karthik subbaraj (@karthiksubbaraj) February 19, 2020