கார்த்திக்கு ஜோடியாக சர்தார் படத்தில் இணையும் கர்ணன் பட நடிகை.!

dhanush
dhanush

தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி நடைபோட்டு வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தனுஷ் இத்திரைப்படத்திற்கு முன்பு அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.  அசுரன் திரைப்படம் வெற்றி பெற்றதால் தான் இத்திரைப்படத்தின் இயக்குனர்  கலைப்புலி எஸ்.தாணு மீண்டும் தனுஷை வைத்து தனது இரண்டாவது படமான கர்ணன் திரைப்படத்தையும் தயாரித்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களுமே பெரும் சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்ணன் திரைப்படம் ரூபாய் 37 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் கர்ணன் திரைப்படம் ரூபாய் 52 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 100% சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.  இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். 50 சதவீத பார்வையாளர்களுடன் இந்த அளவிற்கு வசூல் செய்தது பெரிய விஷயம் தான் என்று கூறிவருகிறார்கள். இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்திருந்தார்.

Rajisha-Vijayan-Pics
Rajisha-Vijayan-Pics

இந்நிலையில் தற்பொழுது இவர் கார்த்திக் நடித்து வரும் சர்தார் திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் கார்த்திக் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். அந்தவகையில் மற்றொரு நடிகையாக ராஷிகண்ணா நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இத்திரைப்படத்தை பி.எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.