என்னால் விஜயகாந்துடன் நடிக்க முடியாது.! சீன் போட்ட நடிகர்.. கடைசியில் யார் நடித்தது தெரியுமா.?

vijaykanth
vijaykanth

Actor Karthik: நடிகர் கார்த்திக் பழம்பெரும் நடிகரான முத்துராமனின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் தொடர்ந்து இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவருடைய முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் பெற்றது.

இவர் சினிமாவிற்கு வளர ஆரம்பித்த காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் இந்த மூன்று பேரும் தான் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வந்தார்கள். இவ்வாறு இவர்களுக்கு அடுத்ததாக லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் வெளியான ஏராளமான திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது.

இவ்வாறு வெற்றி தர படங்களை தந்து வந்த கார்த்திக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள் தான் அதிகம் இருந்து வந்தனர். இவ்வாறு 90 காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். வயதான காரணத்தினால் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

எனவே வில்லனாக நடிக்க ஆரம்பித்தார் அதோடு காமெடி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் எங்கள் அண்ணன். இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கை நடிக்க வைக்க விஜயகாந்த் மிகவும் ஆசைப்பட்டு உள்ளார்.

ஆனால் சில காரணங்களால் கார்த்திக்கால் நடிக்க முடியாமல் போக பிறகு அவருக்கு பதிலாக பிரபுதேவா நடித்திருந்தார். இவ்வாறு இந்த படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை நமீதா இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வடிவேலு, பாண்டியராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.