இயக்குனர் முத்தையா தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருகிறார் இவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் ஒரே ஒரு சமூகத்தை சார்ந்த திரைப்படமாக இருக்கும் இவர் முதன்முதலாக குட்டிப்புலி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
இவர் இயக்குனராக அறிமுகமாகியதும் தொடர்ந்து சில வெற்றித் திரைப்படங்களை கொடுத்து வந்தார் பெரும்பாலும் முத்தையா பாசங்களை வைத்து தான் படத்தை இயக்கி வருகிறார் அந்த வகையில் குட்டி புலி திரைப்படத்தில் அம்மா மகன் பாசத்தை படத்தின் மூலம் வெளிக்காட்டினார் அதேபோல் கொம்பன் திரைப்படத்தில் மாமனார் மருமகன் பாசத்தை மற்றும் நெருக்கத்தையும் காட்டியது. அதேபோல் மருது திரைப்படம் பாட்டிக்கும் பேரனுக்கும் உள்ள பாசத்தை காட்சியாக காண்பித்தார்.
அதேபோல் முத்தையா இயக்கத்தில் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தை உடையது தான் அந்த வகையில் தேவராட்டம் புலிகுத்தி பாண்டி என அனைத்து திரைப்படங்களும் தனித்துவமாக இருந்தது. மேலும் முத்தையா குறிப்பிட்ட சமுதாய சடங்குகளை காட்டுவதில் ஏற்றங்களும் வீழ்ச்சிகளும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த நிலையில் முத்தையா வலையில் அடுத்ததாக கார்த்திக் சிக்கப் போகிறார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மிகவும் பிசியாக நடித்து வரும் கார்த்தி அடுத்ததாக முத்தையா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் கொம்பனுக்கு நிகரான ஒரு வெற்றி திரைப்படத்தை முத்தையா கொடுக்க இருக்கிறார்.
இந்த நிலையில் முத்தையா இந்த திரைப்படத்தை எளிதில் யாராலும் யூகிக்க முடியாத அளவிற்கு திரைக்கதை இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என கூறப்படுகிறது அதனால் என் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.