200-நாள் சூட்டிங்னு சப்பை கட்டு கட்டுற அனைத்து இயக்குனர்களும் பாருங்க…!! அட்லி தம்பி கொஞ்சமாவது கத்துகோங்க.! ரசிகர்கள் விளாசல்

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

கார்த்திக் நரேன் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு அரவிந்த் சாமியை வைத்து நரகாசுரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆனால் இந்த திரைப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை, பைனான்சியல் பிரச்சனையால் இந்த திரைப்படம் வெளிவராமல் இருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் மாபியா திரைப்படம் உருவாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ்சினிமாவில் சிறுவயதிலேயே தனது முழு திறமையும் வெளிப்படுத்தி வருகிறார், சமீபத்தில் கூட கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கு நடந்த பிரச்சனை குறித்து நிருபர் ஒருவர் கேட்டிருந்தார் அதற்கு கார்த்திக் நரேன் புத்திசாலித்தனமாக இது ஒரு அனுபவம் என கூறி பதிலளித்தார்.

அதேபோல் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் திரைப்படங்கள் மிகவும் குறுகிய நாளிலேயே எடுக்கப்பட்டதாகும், அதாவது கிட்டத்தட்ட 40 நாட்களில் முழு படத்தையும் எடுத்து முடித்து விடுவாராம், இது குறித்து அவரிடம் பேட்டியில் கேட்கப்பட்டது. கார்த்திக் நரேன் கூறியதாவது, பொதுவாக நான் இயக்கும் அனைத்து திரைப்படங்களும் 40 நாட்களுக்கு முன்னாடியே முடித்துவிடுவேன் துருவங்கள் பதினாறு 28 நாட்கள், நரகாசுரன் 41 நாட்கள், மாபியா 33 நாட்கள், சொல்லப்போனால் அனைத்தும் திட்டமிடல் மூலம் தான் செய்ய முடியும்,..

முதலில் ஸ்கிரிப்டை மிகவும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் அடுத்ததாக படம் எதிர் தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதையும் தெரிந்து இருக்க வேண்டும், முன்னாடியே நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி வைத்துக்கொள்வேன். பின்பு அதுக்கு ஏத்த மாதிரி படப்பிடிப்புகளை நடத்துவோம். அதேபோல் என்னுடைய படங்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் முடிவதற்கு காரணம் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் ஒரு முக்கிய காரணம்.

அதேபோல் ஒரு காட்சி எடுக்கும் போதே இதற்கு எத்தனை சூட் இருந்தால் போதும் என்று நானே எனக்குள் எதைச் செய்து கொள்வேன், அதேபோல் படம் எப்படி எடுக்க வேண்டும் எந்தக் காட்சி எந்த மாதிரி எப்படி எடுக்கலாம் என எனக்குள் நானே முடிவு செய்து கொள்வேன், அதுமட்டுமில்லாமல் ஒரு காட்சி எடுக்கும்பொழுது கம்மியாக அதிகமாகவே எடுக்கமாட்டேன் சரியாக தேவையான அளவு மட்டுமே எடுப்பேன் என கூறினார்.

இப்படி கார்த்திக் நரேன் கூறிய வீடியோ இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கார்த்திக் நரேனை பார்த்து திட்டமிடல் செயலை கற்றுக் கொள்ளுங்கள் என அட்லீக்கு அறிவுரை செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த மாதிரி திறமையான இயக்குனர்களுக்கு பெரிய நடிகர்கள் பட வாய்ப்பு தரலாம் என கோரிக்கை வைத்து வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் 200 நாட்கள் ஷூட்டிங் என சப்பைக்கட்டு கட்டும் இயக்குனர்கள் இதைப் பார்த்து திருந்த வேண்டும் என கூறுகிறார்கள்.