தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடி கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் அதிதிராவ் ஹைத்ரி. இந்த திரைப்படம் அதிதிராவுக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொண்டதால் இரண்டாவது முறையும் மணிரத்தினம் இயக்கும் திரைப்படத்தில் இணைந்தார்.
சிம்பு, ஜோதிகா,விஜய் சேதுபதி என தொடர்ந்து ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ‘ஹேய் சினாமிகா’ என்ற திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படிப்பட்ட நிலையில் முன்னணி நடிகையான அதிதி ராவ் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர ஆடி கார் ஒன்றை வாங்கிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மும்பை ஆடி கார் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ஆடி கார் குடும்பத்தில் அதிதி ராவ் ஹைதரி வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று அவருக்கு எங்களது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஆடி கார் வாங்கும் பொழுது அதிதீராவ் நிறுவனர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் அதிதிராவ்க்கு தங்களது வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.