தற்பொழுது ஏராளமான முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இத்திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ளது மேலும் பல கோடி பட்ஜெட்டிலும் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸாக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் விக்ரம்,கார்த்திக், ஜெயம் ரவி ஆகியோர்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தினை பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்தினம் அவர்கள் இயற்றியுள்ளார் இந்த திரைப்படத்தின் பற்றி அப்டேட் நாள்தோறும் வெளிவருவதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இத்திரைப்படத்தினை எதிர்பார்த்து காத்து வருகிறார்கள். ஒவ்வொருத்தரின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இப்படத்தில் இடம் பெற்று இருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெரும் எனவும் அனைத்து கேரக்டர்களின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு பிடிக்கும் எனவும் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் கூறியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெற்றிருந்த பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி விக்ரமும் கார்த்திக்கும் ஜெயம் ரவியின் மீது பொறாமை இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள கதாபாத்திரம் தான் மிக முக்கியமான கதாபாத்திரமாம்.
இதன் காரணமாக ஜெயம் ரவிக்கு அதிகப்படியான சம்பளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அனைத்து கேரக்டர்களும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் தருவது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். இதனை விக்ரம் கார்த்திக்கு இருவரும் புரிந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் ஒவ்வொருவரின் நடிப்பு திறமையை பார்த்து தான் அவர்களுடைய கேரக்டரை தர முடியும் மேலும் வசனங்கள் காட்சிகள் அதற்கு ஏற்றார் போல தான் தர முடியும்.இதன் காரணமாக முன்னணி நடிகர்களாக இருந்தாலும் தங்களுடைய காட்சிகள் தான் அதிகமாக இடம்பெற வேண்டும் என்பதை நினைப்பது மிகவும் தவறு எனக் கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியிடப்படும் அனைத்து போஸ்டர்களையும் பார்க்கும் பொழுது அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக தான் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள் இதனால் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. இவர்களைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராயி, திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.