செம்பருத்தி சீரியல் கார்த்திக்வுடன் செல்பி எடுத்துக் கொண்ட முன்னணி நடிகை.! யார் அந்த நடிகை தெரியுமா.?

karthik
karthik

பொதுவாக வெள்ளித்திரையில் நடித்துவரும் ஹீரோவாக இருந்தாலும் ஹீரோயினாக இருந்தாலும் பிரபலமடைய வேண்டும் என்றால் குறைந்தது ஐந்து திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே ஓரளவிற்கு பிரபலம் அடைய முடியும் ஆனால் சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு அப்படி கிடையாது தங்களது முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.

அந்த வகையில் தற்பொழுது பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த ஒரு நடிகர்தான் கார்த்திக். இவர் இதற்கு முன்பு ஆபீஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி சீரியல் தான் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது அதோடு இவரின் திரைவாழ்க்கையில் இந்த சீரியல் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தற்போது வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக செம்பருத்தி சீரியலில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விலகினார். இவர் விலகிய பிறகு செம்பருத்தி சீரியல் டிஆர்பி-யில் முன்னணியில் இருந்து வந்தது ஆனால் தற்போது டிஆர்பி இடம் பெறுவதே இல்லை.

அதோடு இவருடைய ரசிகர்களும் பலர் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கார்த்திக் பிரபல முன்னணி நடிகை ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், அது வேறு யாருமில்லை செம்பருத்தி சீரியல் போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்தான் யாரடி நீ மோகினி இந்த சீரியலின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பயங்கரமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் ரசிகர்களின் க்யூட் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்திக் மற்றும் சைத்ரா ரெட்டி இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

karthik and saithra
karthik and saithra