தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கார்த்திக்.இவர் ரஜினி, கமல் போலவே இவரும் இன்று வரையிலும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சினிமாவில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனர் ஆவார். தற்பொழுது எம் கார்த்திக் நேற்று சனிக்கிழமை அன்று சுவாச திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் ப்போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீப காலமாக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் கார்த்திக்கும் பிஜேபி அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து இவரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் உடல் சரியில்லாத காரணத்தினால் தீவிர சிகிச்சைக்காக மலர் ப்போர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனைவருக்கும் அதிர்ச்சியாகி உள்ளது.
அந்தவகையில் இவருக்கு பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்து வந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறது. இவரின் உடல்நலம் விரைவில் குணமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.