கல்யாணம் முடிந்த கையுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு ரேவதி இடம் அவரது சித்தியான சந்திரா கார்த்திக்கை பற்றி இல்லாததும் பொல்லாததுமாக பேசி ரேவதியை உசுப்பேத்தி விடுகிறார்.
விருப்பமே இல்லாத கல்யாணம் நடந்த கோபத்தில் இருந்த ரேவதிக்கு இது மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. சித்தி கூறுவதைக் கேட்டு ஆத்திரமடைந்த ரேவதி உடனே அவன் யாரென்று காட்டி விட்டான் இனிமேல் என்னுடைய சுய ரூபத்தை நான் காட்டப் போகிறேன் என ரேவதி கூறுகிறாள். உடனே அந்த நேரத்தில் ஈஸ்வரி உள்ளே நுழைகிறாள் ஈஸ்வரி உள்ளே நுழைந்ததும் என்ன இங்க சத்தம் என்ன ரேவதிய மேல கோபம் ஏத்துறீங்களா என கேட்கிறாள் ஈஸ்வரி.
அதற்கு உடனே சந்திரா ரேவதிக்கு விருப்பமே இல்லாத கல்யாணத்தை பண்ணி வச்சுட்டு எப்படி உன்னால இவ்வளவு எளிமையா நடந்துக்க முடியாது என கூறுகிறாள். அதற்கு சாமுண்டீஸ்வரி நான் எது செய்தாலும் அது ரேவதிக்கு நல்ல முடிவாக தான் இருக்கும் என சாமுண்டீஸ்வரி கூறுகிறாள்.
அதன் பிறகு சாமுண்டீஸ்வரி ரேவதியை பூஜை ரூமுக்கு வந்து விளக்கு ஏற்றுமாறு கேட்டுக் கொள்கிறாள். ஏற்கனவே கோபத்தில் இருந்த ரேவதி எப்படி மா என்னுடைய விருப்பமே இல்லாத கல்யாணத்தை செஞ்சு வச்சீங்க இப்ப என்னன்னா சம்பிரதாயம் சொல்லிட்டு என்னென்னமோ செய்ய சொல்றீங்க எனக்கு இதுல துளியும் விருப்பமே இல்லை என ரேவதி கூறுகிறார்.
உடனே சாமுண்டீஸ்வரி ரேவதி சமாதானம் செய்துவிட்டு அவளை பூஜை அறைக்கு சென்று விளக்கு ஏற்ற வைக்கிறாள். இதெல்லாம் ஒருபுறம் இருக்க கார்த்திக் எதையோ யோசித்துக் கொண்டு தன்னுடைய அறையில் உட்கார்ந்திருக்கிறார். அந்த நேரத்தில் கார்த்தியின் மாமா மற்றும் அவருடைய மாப்பிள்ளை இருவரும் உள்ளே நுழைந்து தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி தங்களுக்குள்ளே பேசிக் கொண்டிருக்கும்போது கார்த்திக் எதையோ யோசித்த மாதிரியே நின்று கொண்டிருக்கிறார். உடனே கார்த்தியின் மாமா மாப்பிள்ளை உங்களுக்கு என்ன ஆச்சு நாங்க பேசறது நீங்க காதுல வாங்க மாட்டேங்கறீங்க என கூறுகிறார். அதற்கு கார்த்திக் அந்த மகேஷ் எங்க போனானே தெரியல அவனை யார் கடத்தி வச்சி இருக்காங்கன்னு தெரியல என கூறுகிறார்.
அதற்கு கார்த்தியின் மாமா அவன பத்தி இப்ப ஏன் மாப்பிள்ளை பேசுறீங்க அவன் போயிட்டு வரேன் விடுங்க ஆக வேண்டிய வேலையை பார்ப்போம் என கூறுகிறார். அதற்கு கார்த்தி இல்ல மாமா அவனை எப்படியாவது ஏதாவது முன்னாடி அழைத்து வந்து நிப்பாட்டனும் என கார்த்தி கூறுகிறார். அந்த நேரத்தில் கல்யாணத்திற்கு முன்பு சாமுண்டீஸ்வரி இத்தனிடம் ஒரு விஷயம் கூறினால் என கார்த்தியிடம் மாமா கூறுகிறார். அது என்ன விஷயம் என சகல கேட்க அது ஒன்னும் இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியே கார்த்தி தான் மாப்பிள்ளை என சாமுண்டீஸ்வரி முடிவெடுத்து விட்டாள் என மாமா கூறுகிறார்.
அதற்கு கார்த்தி இதை என்னிடம் முன்னாடியே சொல்ல வேண்டியது தானே என கேட்க சாமுண்டீஸ்வரி தான் யாரிடமும் கூற வேண்டாம் என என்னிடம் கூறினால் என்று மாமா சொல்லி விடுகிறார். இப்படி இவர்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கும் போது ஒரு சாமியார் வீட்டுக்குள் நுழைகிறார் அவரை அழைத்த சாமுண்டீஸ்வரி தன்னுடைய மகளுக்கு சாந்தி முகூர்த்தம் நடத்த நல்ல நேரம் குறைத்துக் கொடுங்கள் என கூறுகிறார்.
அதற்கு கார்த்திக் ஏற்கனவே இருவருக்கும் பிடிக்காத கல்யாணத்தை செஞ்சு வச்சுட்டீங்க இதிலேயே எங்களுக்கு மன வருத்தமாகிவிட்டது. இப்படி இருக்கையில் சாந்தி முகூர்த்தம் இப்போது வேண்டாம் என கார்த்தி கூறுகிறார். அதற்கு சாமுண்டீஸ்வரி அதெல்லாம் எந்தெந்த நேரத்தில் நடக்கணுமோ அந்த நேரத்தில் நடக்கிறது நல்லது எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என சாமுண்டீஸ்வரி கார்த்திகை சமாதானம் செய்கிறார். உடனே மூக்கு வெறுத்தது போல சந்திரா ரேவதியை உசுப்பேத்தும் வகையில் பேசிக் கொண்டிருக்கிறாள். இதை கேட்டுக் கொண்டிருந்த ரேவதி ஏற்கனவே எனக்கு பிடிக்காத கல்யாணத்தை பண்ணி வச்சீங்க அதும் இல்லாம சடங்கு சம்பிரதாயம் என்று என்ன என்னமோ பண்ணி வச்சீங்க இருந்தாலும் நான் எல்லாத்தையும் செஞ்சன் ஆனா விருப்பமே இல்லாத கல்யாணத்தை பண்ணி வச்சது மட்டுமல்லாமல் எனக்கு சாந்தி முகூர்த்த வேற பண்ணி வைக்க பாக்குறீங்க நான் இந்த வீட்ல இருக்கிறதா இல்லை வெளியே போவதா என ரேவதி கூறுகிறார்.
அதற்கு சாமுண்டீஸ்வரி ரேவதியை ஏதேதோ சொல்லி சமாதானம் செய்கிறாள். அதன் பிறகு தனது மூத்த மாப்பிள்ளை கூப்பிட்ட சாமுண்டீஸ்வரி அவரிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து சாந்தி முகூர்த்தத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கு உடனே சரிங்க ஆத்தா என சொல்லிவிட்டு மூத்த மாப்பிள்ளை வீட்டை விட்டு வெளியே சென்று கார்த்தியின் பாட்டிக்கு போன் செய்து சாந்தி முகூர்த்தத்தை பற்றி பேசுகிறார். உடனே பாட்டி எந்த பொருளையும் நீ வாங்க போகலாம் நேரா இங்க வீட்டுக்கு வா என அந்த மூத்த மாப்பிள்ளை இடம் கூறுகிறார். அவரும் சரியென ஒப்புக்கொண்டு பாட்டியின் வீட்டிற்கு புறப்படும் போகிறார்.
உடனே பாட்டி தன்னுடைய பெற குழந்தைகளுக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கப்போகிறது அதில் என்னுடைய பங்கும் இருக்கணும் என நான் ஆசைப்படுகிறேன் என்று முருகனை வேண்டிக்கொள்கிறாள். மறுபக்கம் கார்த்திகை தேடி சாமுண்டீஸ்வரியின் இரண்டு மகள்களும் கார்த்திகை வந்து பயங்கரமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடனே இடையில் வந்த அவர்களுடைய அப்பா போதும் நிறுத்துங்க என்ன அவர பத்தி என்ன என்னமோ பேசுறீங்க அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா என ஒரு கர்வமாக கூறுகிறார்.
அவன் யாரா இருந்தா என்ன என்ற மூத்த மகள் சொல்ல உடனே அப்பா அவனா அப்படி எல்லாம் சொல்லக்கூடாது அவர் இந்த வீட்டினுடைய மாப்பிள்ளை என கூறுகிறார் உடனே அவருடைய மகள்கள் கார்த்திக்கு மரியாதை கொடுக்காத விதமாக பேசுகிறார்கள் உடனே கோபமடைந்த அவருடைய அப்பா அவர் யார் என்று தெரியுமா என ஒன்றுக்கு மூன்று முறை அழுத்தி அழுத்தி கூறுகிறார் உடனே சந்தேகமாக பார்த்த அவர்களுடைய மகள்கள் அதற்கிடையில் கார்த்திக் மாமா என்று அவரை சமாதானம் படுத்தி உள்ளார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.