இளவரசர் மற்றும் இளவரசிக்கு டாட்டா சொல்லிவிட்டு வந்த கார்த்தி.! என்ன பகிர்ந்துள்ளார் பார்த்தீங்களா.

karthi

தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் விக்ரம்,ஜெயம் ரவி,ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு,பிரகாஷ்ராஜ்,பார்த்திபன்,சரத்குமார்,த்ரிஷா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகிறார்கள் இந்த திரைப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.

பல சினிமா பிரபலங்களும் இந்த திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என முயற்சி செய்து கைவிடப்பட்ட கதைதான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை தற்போது மிகவும் தைரியமாக இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கி வருகிறார்.இந்த திரைப்படத்தில் நடித்து வரும் பல பிரபலங்களும் தங்களது காட்சிகளை ஒவ்வொன்றாக முடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் அண்மையில் ஜெயம் ரவி தான் நடிக்கும் கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரைப் பின்பற்றி தற்பொழுது இந்த திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி தனது மொத்த படப்பிடிப்பையும் முடித்து உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வித்தியாசமாக பதிவு செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களது காட்சி முடிந்து விட்டது நீங்கள் நடித்த காட்சிகளை நாங்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் கூடிய சீக்கிரம் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பலரும் கேட்டு வருகிறார்கள்.

ஒரு சில ரசிகர்கள் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தது எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் உங்களுக்கு மிகவும் சிறப்பான கதாபாத்திரத்தை தான் கொடுத்துள்ளார்கள் என்று நீங்கள் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.