இயக்குனர் மணிரத்தினம் தமிழ் சினிமா உலகில் இதுவரை ரஜினி, கமல் போன்ற டாப் நட்சத்திரங்கள் தொடங்கி இளம் நடிகர்கள் வரை அனைவரையும் வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து மக்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பது அவரது கனவு அதற்காக ஓட ஆரம்பித்தார்.
ஒரு வழியாக பல்வேறு தடைகளை தகர்த்து எறிந்து லைக்கா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக எடுத்தார் படம். அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது படம் எப்படி இருக்குமோ என எதிர்பார்த்த ஒவ்வொருவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில் படம் இருந்ததால்..
ரசிகர்களும், மக்களும் படத்தை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் கொடுத்தனர் அதனால் இந்த திரைப்படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 270 கோடிக்கு மேல் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையாது என சொல்லப்படுகிறது இந்த படத்தை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகமும் வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருப்பார் ஆனால் உண்மையில் முதன் முதலில் அந்த கேரக்டருக்கு தேர்வானது கார்த்தி தானாம்.
பல வருடங்களுக்கு முன்பே மணிரத்தினம் கார்த்தியிடம் இதை சொல்லிவிட்டாராம் கதையை கேட்ட கார்த்தியும் ரொம்ப பிடித்துப் போகவே அதில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார் ஆனால் படம் உருவாகும் சமயத்தில் மணிரத்தினம் கார்த்திக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரம் தான் பொருத்தமாக இருக்கும் என சொல்லி அவரை அந்த கதாபாத்திரத்தில் மாற்றி விட்டாராம். குருநாதரே இப்படி சொல்லியதால் அந்த வார்த்தைக்கு மதிப்பளித்து கார்த்தியும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.