தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விருமன். இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியிருந்தார் மற்றும் விருமன் படத்தில் ஹீரோயினாக முதல்முறையாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் அறிமுகம் ஆகியுள்ளார். படம் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருவதோடு போட்ட பட்ஜெட்டை தாண்டி அதிகளவு வசூலை ஈட்டி வருகின்றன.
தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் வெளி வருகின்றன. அந்த படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் உண்மை அந்த வகையில் தற்போது விருமன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இதற்கு முன் கமல் நடிப்பில் விக்ரம் எனும் திரைப்படம் உருவாகி வெளிவந்தது.
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தின் ஆக்ஷன் சீன்கள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருந்ததால் இந்த படத்தை மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். படமும் 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ளது. இதனால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் அடுத்தடுத்த வேலையை செய்து வருகின்றன. இந்த படத்தில் கடைசி சில நிமிட காட்சிகளில் சூரியா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார் அதுவும் இந்த படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக அமைந்தது.
விக்ரம் படத்தில் சூர்யாவை தொடர்ந்து சூர்யாவின் தம்பி கார்த்தியும் வாய்ஸ் கொடுத்து இருந்தார். ஆம் நடிகர் கார்த்தி தில்லி என்ற ரோலில் வாய்ஸ் கொடுத்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சூர்யா நடித்தது போலவே விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் கார்த்தி நடித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ஆனால் அவர் நடிக்காமல் வாய்ஸ் மட்டும் கொடுத்து இருக்கிறார் என கூறிவந்தனர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியது, விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் என்னுடைய தில்லி ரோல் தேவைப்பட்டது. ஆனால் அப்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வந்தேன் அதற்காக நீளமான முடி வைத்திருந்தேன் அந்த படம் எடுத்து முடியாததால் விக்ரம் படத்தின் ரோலுக்கு முடியை வெட்ட முடியாது என்பதாலே நான் ஸ்கிரீனில் வராமல் வாய்ஸ் மட்டும் கொடுத்தேன் என கூறியுள்ளார்.