தமிழ் திரை உலகில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தோல்வியை காணாத இயக்குனர்களாக இருக்கின்றனர். அந்த லிஸ்டில் இருப்பவர் லோகேஷ் கனகராஜ் இவர் குறைந்த திரைப்படங்களை எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் பிரம்மாண்ட வெற்றி. இதனால் அவரது மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்து தற்போது அவரது படத்தில் நடிக்க பல்வேறு நடிகர்கள் போட்டி போடும் அளவிற்கு தரமான சம்பவம் பண்ணி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர், கமலஹாசனை வைத்து விக்ரம் என்னும் படமும் எடுத்தார். அனைத்து படங்களும் வெற்றி படங்கள்தான் குறிப்பாக உலகநாயகன் கமலஹாசனின் விக்ரம் படம் பிரம்மாண்டமான சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2 மற்றும் சல்மான்கான் உடன் ஒரு படம் பண்ண போவதாக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது
ஆனால் லோகேஷ் கனகராஜ் எதையுமே அதிகாரப்பூர்வமாக சொல்லாமல் அமைதி காத்து வந்தார் ஆனால் ரசிகர்கள் விடுவதாக இல்லை கார்த்தி விஜய் போன்ற நடிகர்களை பார்த்தால் முதலில் கேட்பது லோகேஷ் கனகராஜ் உடன் எப்பொழுது படம் பண்ண போகிறீர்கள் என்பதுதான். லோகேஷ் பதிலளிக்கவில்லை என்பதற்காக நடிகர் கார்த்தி இடம் அப்டேட் கேட்டுள்ளனர்.
விருமன் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்த பிறகு நடிகர் கார்த்தியை ரசிகர்கள் கைதி 2 படம் எப்பொழுது என கேட்டு உள்ளனர். சந்தோஷத்தின் உச்சியில் இருந்த நடிகர் கார்த்தி என்ன பேசுவது என்று தெரியாமல் மொத்த உண்மையையும் போட்டு உடைத்து உள்ளார் அதாவது லோகேஷ் கனகராஜ் விஜய் சாரை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்
அது முடிந்தவுடன் கைதி இரண்டாவது பாகம் ஆரம்பித்து விடுவோம் என இரண்டு அப்டேட்டுகளையும் ஒரே சமயத்தில் கொடுத்து விட்டார். இதனால் லோகேஷ் கனகராஜ் செம்ம அப்செட்டில் இருக்கிறாராம் ஒரு அப்டேட் கொடுத்தால் பரவாயில்லை விஜய் அப்டேட்டையும் சேர்த்து கொடுத்துவிட்டார் என்பது அவருக்கு பெரிய தலைவலியை கொடுத்துள்ளாம்.