“பருத்திவீரன்” திரைப்படத்திற்காக கார்த்தி பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல.. ரகசியத்தை உடைக்கும் பிரியாமணி.!

priyamani
priyamani

தமிழ் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியாமணி. தமிழில் பருத்திவீரன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பருத்திவீரன் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு ஏகப்பட்ட படங்கள் கிடைத்தன.

ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாமல் போனதால் பிறமொழி பக்கங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவையும் தாண்டி ஹிந்தியிலும் தற்பொழுது படங்கள் மற்றும் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடனமாடி வருகிறார். தற்பொழுது கூட ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும்.

“ஜவான்” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் பிரியாமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் பருத்திவீரன் படம் குறித்தும் கார்த்தி குறித்தும் பேசி உள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளது பருத்தி வீரன் படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் அமீர் எங்களுக்கு ரொம்ப பக்கபலமாக இருந்தார்.

நாங்கள் எந்த மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்கிறோம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார் அதை என்னால் மறக்கவே முடியாது மேலும் கார்த்தியும் ஒரு மிகச் சிறந்த நடிகர். படத்தின் கதைக்கு ஏற்றவாறு நான் நடிக்கிறேனா இல்லையா என அவரைப் பற்றி இயக்குனர் அமீருடன் அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிகர் கார்த்தி அழுக்கான சட்டையில் இருக்க வேண்டும் ஆனால் அப்பொழுது அவர் போட்டிருந்த சட்டை ரொம்ப புதுசு போல இருந்தது இதை பார்த்த உடனே நீ அஞ்சு ரவுண்டு ஓடிவா என கூறிவிட்டார் நடிகர் கார்த்தியும் மறுப்பு தெரிவிக்காமல் படப்பிடிப்பு தளத்தை சுற்றி ஒரு ஐந்து ஆறு ரவுண்டு ஓடி வந்தார் அப்பொழுதே படத்தில் நடிப்பதற்காக ரொம்ப டெடிகேட்டாக இருந்தார். நான் எல்லாம் பார்த்து வியந்து விட்டேன் என கார்த்தியை பற்றி புகழ்ந்து பேசினார் நடிகை பிரியாமணி.