வெள்ளித்திரையில் சென்ற வருடம் இரு திரைப்படங்கள் திரையரங்குகளில் மோதிக்கொண்டன அந்த திரைப்படங்கள் என்னவென்றால் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வசூல் ரீதியாக அதிக வசூல் அளித்தது.
மேலும் கார்த்தியின் கைதி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.
கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவரது இயக்கத்தை பார்த்து விஜய் தனது படத்திற்காக கமிட் செய்து தற்போது அவரது இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இந்த வருடம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது அதே தினத்தில் கார்த்தியின் சுல்தான் படமும் வெளியாக உள்ளதாம்.
மாஸ்டர் திரைப்படத்திற்கு ஆயிரம் தியேட்டர்கள் குறையாமல் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் முடிவெடத்துள்ள நிலையில் பொங்கல் போட்டியிலிருந்து சுல்தான் படம் விலகுவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சிம்பு நடித்திருக்கும் ஈஸ்வரன் திரைப்படத்தையும் பொங்கலுக்கு வெளியிடலாம் என படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்களாம் இதற்காக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை படக்குழுவினர்கள் நடத்தியுள்ளனர்.
அதில் சுமார் 800 திரையரங்குகளில் மாஸ்டர் மட்டுமே திரையரங்குகளில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் உறுதியாக உள்ளதால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு வெறும் 200 திரையரங்குகள் கிடைத்துள்ளதாம்.
மேலும் ரிலீஸுக்கு பிறகு ஈஸ்வரன் திரைப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பச்சத்தில் ஈஸ்வரன் படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள் இதனால் ஈஸ்வரன் படக்குழு ஒரே அதிர்ச்சியில் உள்ளார்கள்.