நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படபிடிப்பு மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜப்பான் திரைப்படத்திலிருந்து ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் கடந்த ஆண்டு மூன்று படங்கள் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜப்பான் திரைப்படம் தமிழகத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து ஜப்பான் படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது இதனை தொடர்ந்து ஜப்பான் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் சுனில் மற்றும் இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இரண்டாவது பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் முடிந்தவுடன் ஜப்பான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கைதி 2 படத்தில் கார்த்தி அவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.