முன்னணி நடிகர்களுக்கு திரைப்படம் ஹிட்டடித்தது என்றால் அது அவர்களின் ரசிகர்கள்தான் காரணம் அதுவே வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஒரு திரைப்படம் ஹிட் அடிக்கிறது என்றால் அதற்கு காரணம் கதை தேர்வு தான். அந்த வகையில் நடிகர் கார்த்திக் கதை தேர்வில் நல்ல கதையை தேர்வு செய்து படங்களில் நடித்து வருபவர்.
இந்த நிலையில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சுல்தான் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் முத்தையா இயக்கத்தில் விருமன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சர்தார் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங்கை கார்த்தி நிறைவு செய்திருந்தார் அதேபோல் விருமன் திரைப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கார்த்திக் அவருக்கு ஜோடியாக சங்கர் மகள் ஆதிதி சங்கர் அறிமுகமாக இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசை அமைத்துள்ளார்.
அதேபோல் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளது படக்குழு.

இதோ விருமன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த போஸ்டரை ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
Here it is!
Dropping the super intense first look poster of #Viruman 🔥#VirumanFirstLook@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/aZsXcSSyXG
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) January 14, 2022